ஊராட்சி செயலாளர் கொலை வழக்கில் உறவினர்கள் 3 பேர் கைது


ஊராட்சி செயலாளர் கொலை வழக்கில் உறவினர்கள் 3 பேர் கைது
x

ஊராட்சி செயலாளர் கொலை வழக்கில் உறவினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

மதுரை,

மதுரை அருகே உள்ள வரிச்சியூர் தட்சனேந்தல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 52). இடையப்பட்டி ஊராட்சி மன்ற செயலாளராக இருந்து வந்தார். அங்குள்ள கோவிலில் பூசாரியாகவும் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், லட்சுமணன் நேற்றுமுன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, ஒரு மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து கருப்பாயூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலையான லட்சுமணனின் உறவினர்கள் சரத்குமார் (27), சிங்கராஜ் (25), மணிகண்டன் (32) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். கோவிலில் முதல் மரியாதை கிடைக்காத ஆத்திரத்தில் லட்சுமணனை கொலை செய்ததாக அவர்கள் 3 பேரும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story