லாட்டரி விற்ற 3 பேர் கைது


லாட்டரி விற்ற 3 பேர் கைது
x

லாட்டரி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி போலீசார் மோதுகானப்பள்ளி அருகில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற சூளகிரி அண்ணா நகர் திருமுருகன் (வயது 41), சேகர் (39), உத்தனப்பள்ளி அருகே உள்ள அஞ்சலகிரி சசிக்குமார் (26) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.19,500 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story