பணத்துடன் தப்பி ஓடிய வாலிபர் கைது
பணத்துடன் தப்பி ஓடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தொண்டி,
தொண்டி புதுக்குடியை சேர்ந்தவர் கனி (வயது 60). இவர் நேற்று தொண்டியில் ஏ.டி.எம்.க்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு நின்று கொண்டு இருந்த வாலிபர் ஒருவரிடம் பணம் எடுத்து தரும்படி கூறியுள்ளார். அப்போது அந்த வாலிபர் கனியிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி பணம் எடுப்பதுபோல் முயற்சி செய்துள்ளார். பின்னர் ஒரு ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுத்து பணம் வரவில்லை என்றும் வங்கியில் சென்று கேட்டுப்பாருங்கள் என்றும் கூறியுள்ளார். இந்தநிலையில் வங்கியில் சென்று விசாரித்தபோது ஏமாற்றப்பட்டதை அறிந்த கனி விரைந்து வந்து வாலிபரிடம் விசாரித்தார். அப்போது அங்கு வந்த தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் அந்த வாலிபரை விசாரிக்க முயன்றபோது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். உடனே இன்ஸ்பெக்டரும் பொதுமக்களும் அந்த வாலிபரை விரட்டி பிடித்துள்ளனர். அதன்பின்னர் அந்த வாலிபரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் தொண்டி அருகே உள்ள பாசிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த செய்யது முகமது என்பவரது மகன் செய்யது இப்ராகிம் (வயது 27) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையின் போது அவரை சோதனையிட்டதில் 5 ஏ.டி.எம். கார்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் அதனை கைப்பற்றி உள்ளனர். ரூ.13 ஆயிரத்து 500-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் மீது திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், சி.கே.மங்கலம், தொண்டி, பரமக்குடி, எஸ்.பி.பட்டினம் ஆகிய போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்யது இப்ராகிமை கைது செய்தனர்.