ஆடு திருடிய பெண் உள்பட 3 பேர் கைது
ஆடு திருடிய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
பேரையூர்,
உசிலம்பட்டி தாலுகா பெருமாள்கோவில் பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி பாண்டீஸ்வரி (வயது 36). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று பாண்டீஸ்வரி தனது ஆடுகளை வீட்டின் முன்பு இருந்த வேப்ப மரத்தில் கட்டிப் போட்டு உள்ளார். அப்போது ஒரு ஆடு திருடு போயிருந்தது. இதுகுறித்து பாண்டீஸ்வரி சேடபட்டி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் உசிலம்பட்டி தாலுகா வடகாட்டுப்பட்டியை சேர்ந்த வினோத்பாண்டி (22), மேக்கிலார்பட்டியை சேர்ந்த பாண்டி (29), கவிதா (30) ஆகிய 3 பேரை ஆட்டை திருடியதாக சேடபட்டி போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story