பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள் காரில் கடத்தல்-2 பேர் கைது

பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு ரூ.4 லட்சம் புகையிலை பொருட்களை காரில் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி
ஓசூர்:
ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 380 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விஷாராம் (வயது 29) மற்றும் குஜராத்தை சேர்ந்த மாலாபாய் (35) ஆகிய 2 பேரும், பெங்களூருவில் இருந்து அவற்றை விற்பனைக்காக சென்னைக்கு காரில் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து குட்கா பொருட்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story