கல்லூரி மாணவிக்கு மிரட்டல்; போக்சோவில் வாலிபர் கைது
தர்மபுரியில் காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவிக்கு மிரட்டல்; போக்சோவில் வாலிபர் கைது.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லூரி செல்வதற்காக கெங்கலாபுரம் பஸ் நிறுத்தத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த சிவாடி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (23) என்ற வாலிபர் மாணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து தன்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தினார். தன்னை காதலிக்க மறுத்தால் எந்த நேரத்திலும் முகத்தில் திராவகம் (ஆசிட்) அடித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக அந்த மாணவி தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சஞ்சயை தேடி வந்தனர். தர்மபுரி அருகே பதுங்கி இருந்த அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story