பெண்ணிடம் பணம் பறித்தவர் கைது


பெண்ணிடம் பணம் பறித்தவர் கைது
x

பெண்ணிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கிழக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி ராஜபிரியா (வயது33). இவர் இல்லம் தேடி கல்வி திட்டதில் பள்ளிக்குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார். கடந்தமாதம் 16-ந் தேதி மாலை வண்டி பேட்டரி பழுதானதால் ராமநாதபுரம் வந்து பழுது பார்த்து விட்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தார். ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை ஐந்தினை பூங்கா பகுதியில் சென்றபோது மற்றொரு பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ராஜபிரியாவின் கைப்பையை பறித்து கொண்டு தப்ப முயன்றுள்ளார். அவர் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். இதனால் மர்ம நபர் பைக்கை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். வழியில் பெட்ரோல் காலியானதால் மறைவான இடத்தில் பைக்கை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். கைப்பையில் ரூ.3 ஆயிரத்து 600 பணம் இருந்துள்ளது. இதுகுறித்து ராஜபிரியாவின் கணவர் ராஜ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து மோட்டார் சைக்கிளை வைத்து ஆர்.எஸ்.மடையை சேர்ந்த சிவசுப்பு மகன் கபிலன் (22) என்பதை கண்டறிந்தனர். இவர் திருப்பூரில் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் திருப்பூர் சென்று வாலிபர் கபிலனை கைது செய்து ராமநாதபுரம் கொண்டு வந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மருத்துவ பரிசோதனைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டார்.


Related Tags :
Next Story