1½ கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது
1½ கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே சதுரவேதமங்கலம் போலீஸ் நிலைய சப்-இ்ன்ஸ்பெக்டர் அந்தோணி மணிவேல் நேற்று அதிகாலை 3 மணி அளவில் பிரான்மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது 2 பேரை பிடித்து சோதனை செய்ததில் 1½ கிலோ கஞ்சா வைத்து இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.விசாரணையில் பூலாங்குறிச்சி அருகே மிதவைப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த சந்தோஷ் (வயது 21). புதுக்கோட்டை மாவட்டம் உசிலங்குளம் பழனிச்சாமி (19) என்பது தெரியவந்தது. 2 பேரும் திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சாவை வாங்கி வந்தது தெரிய வந்தது.
Related Tags :
Next Story