450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்; 2 பேர் கைது
450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்; 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள இருமேனி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்பட உள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது இருமேனி சாலையில் நின்று கொண்டு இருந்த ஆட்டோ ஒன்றை சோதனை செய்துள்ளனர். அப்போது ஆட்டோவில் இருந்த தடைசெய்யப்பட்ட 450 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து ராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் பகுதியை சேர்ந்த சேகுமுகைதீன், ஹமீதுகான் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய 3 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் ஆட்டோ, இருசக்கர வாகனத்தையும் மண்டபம் வனத்துறை அலுவலகம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதாகவும் இவற்றின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.15 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.