மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது


மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
x

மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சி பள்ளத்தோட்டத்தை சேர்ந்தவர் ஜானகி அம்மாள் (வயது 62). கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் அணிந்திருந்த 2½ பவுன் நகையை மர்மநபர் பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்தநிலையில் மூதாட்டியிடம் நகை பறித்ததாக குமாரபாளையம் தட்டாங்குட்டையை சேர்ந்த ராஜேஷ்கண்ணா (45) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இதேபோல் நாச்சிபாளையம் செல்வராஜ் என்பவரது ஆடுகளை திருடியதாக கொக்கராயன்பேட்டையை சேர்ந்த அருணாச்சலம் (45) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story