லோடு வேனை திருடியவர் கைது


லோடு வேனை திருடியவர் கைது
x

லோடு வேனை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை


மதுரை சிந்தாமணி ரோடு, மாடசாமி தெருவில் குடியிருப்பவர் லட்சுமணன். சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பு லோடு வேன் வாகனத்தை நிறுத்தி இருந்தார். காலையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கீரைத்துறை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாபாயிடம் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் உடனடியாக சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் வாகனத்தை திருடிய மர்ம கும்பல் விருதுநகர் அருகே தனித்தனியாக பிரித்து விற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. உடனே அங்கு சென்று வாகனத்தை திருடி சென்ற விருதுநகர் மாவட்டம், கொசு குண்டு பகுதியை சேர்ந்த குமாரண்டி மகன் ரவிக்குமார் என்பவரை கைது செய்தனர். லோடுவேனை கைப்பற்றினர். மதுரையில் லோடுவேன் திருடுபோன நான்கு மணி நேரத்தில் திருடியவரை கைது செய்த போலீசாரை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பாராட்டினார்.


Related Tags :
Next Story