நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது-போலீஸ் சூப்பிரண்டு தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது-போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x

நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய நாமக்கல்லை சேர்ந்த மாதவன் என்கிற மாயாண்டி, புவனேஸ்வரி, தமிழரசி, அருள்மணி, ரேவதி, ஆனந்தி, கற்பகம் மற்றும் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த பேபி, மஞ்சு ஆகியோர் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு சொந்தமான 29 வங்கி கணக்குகள், 15 வாகனங்கள் மற்றும் 6 அசையா சொத்துக்களின் ஆவணங்கள் முடக்கப்பட்டு உள்ளன.

இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 கோடியே 43 லட்சம் ஆகும். கஞ்சா வழக்கில் தொடர்புடைய 9 பேரும் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், அவர்களில் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் நாமக்கல் மாவட்டத்தை கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைத்து வகையான கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இது சம்பந்தமான புகார் மற்றும் தகவல்களை 9498181216 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story