சேலம் தாதகாப்பட்டியில் தொழிலாளியை தாக்கிய சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது


சேலம் தாதகாப்பட்டியில் தொழிலாளியை தாக்கிய சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது
x

சேலம் தாதகாப்பட்டியில் தொழிலாளியை தாக்கிய சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

அன்னதானப்பட்டி:

சேலம் தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் டீக்கடையில் அப்துல் சுகூர் (வயது 54) என்பவர் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு டீக்கடைக்கு வந்த சில நபர்கள் அவரிடம் சிகரெட் கேட்டதாக தெரிகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு அப்துல் சுகூரை அவர்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கிருந்த பிஸ்கட், பலகாரங்கள் வைத்திருந்த ஜாடிகளை அவர்கள் எடுத்து உடைத்து கடையை சூறையாடி உள்ளனர்.

இது குறித்து தொழிலாளி அப்துல் சுகூர் அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (22), சதீஷ்குமார் (21), ரஞ்சித் குமார் (25) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என 5 பேரை கைது செய்தனர். இதில் ரஞ்சித் குமார் பிரபல ரவுடி ஆவார். இவர் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி செல்லத்துரை கொலை வழக்கில் ஏற்கனவே கைதானவர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story