மதுபாட்டில்கள் விற்ற 3 பேர் சிக்கினர்


மதுபாட்டில்கள் விற்ற 3 பேர் சிக்கினர்
x

மதுபாட்டில்கள் விற்ற 3 பேர் சிக்கினர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தக்கட்டி, ஓதிபுரம் கிராமங்களில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக அஞ்செட்டி போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த கிராமங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தக்கட்டியை சேர்ந்த செல்வம் (வயது 45), பைராஜ் (42) மற்றும் ஓதிபுரத்தை சேர்ந்த சிவமாதன் (50) ஆகியோர், வீட்டில் கர்நாடக மாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story