சாமி படத்தை சேதப்படுத்திய 3 பேர் கைது


சாமி படத்தை சேதப்படுத்திய 3 பேர் கைது
x

சாமி படத்தை சேதப்படுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. அப்போது இருதரப்பை சேர்ந்தவர்களிடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக கோட்டையூரை சேர்ந்த அருள்மொழிவர்மன், அருண், மகேந்திரன் ஆகியோர் நேற்று முன்தினம் கோட்டையூரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே கட்டப்பட்டிருந்த கிருஷ்ணரின் படம் மற்றும் தோரணங்களை சேதப்படுத்தினர். இதைப்பார்த்த பெட்ேரால் பங்க் காவலாளியான அதிகரை கிராமத்தை சேர்ந்த ராசு அவர்களை தட்டிக்கேட்டார். ஆத்திரம் அடைந்த அவர்கள் ராசுவுக்கு கொலை மிரட்டல் விடுத்து, பெட்ரோல் பங்கின் கேட் மற்றும் பொருட்களை கட்டையால் உடைத்து சேதப்படுத்திவிட்டு சென்றனர். இதுகுறித்து ராசு இளையான்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செழியன் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் நேற்று கைது செய்தார்.



Next Story