வாலிபர்கள் 2 பேர் கைது


வாலிபர்கள் 2 பேர் கைது
x

தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


மதுரை தல்லாகுளம், திருப்பாலை, கூடல்புதூர், அண்ணா நகர், தெப்பக்குளம், எஸ்.எஸ்.காலனி பகுதிகளில் பகுதியில் தொடர் சங்கிலி பறிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு வந்தன. இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தரவின் பேரில் போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள் சுரேஷ்குமார் (தல்லாகுளம்), சூரக்குமார் (அண்ணாநகர்), இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இந்த சம்பவத்தில் தொடர்பு உடைய குற்றவாளிகளை தேடி வந்தனர். அதில் கிருஷ்ணா புரம் காலனியை சேர்ந்த வைரமணி (வயது 24), ஆத்தி குளத்தை சேர்ந்த வீரகார்த்திக் (23) ஆகியோர் சங்கிலி பறிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த சுமார் ரூ.9 லட்சம் மதிப்பிலான 25 பவுன் தங்க நகைகள் மற்றும் 20,500 ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை கமிஷனர் பாராட்டினார்.


Related Tags :
Next Story