அந்தியூர் அருகே யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற 4 பேர் கைது


அந்தியூர் அருகே யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற 4 பேர் கைது
x

அந்தியூர் அருகே யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

4 யானை தந்தங்கள்

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் அந்தியூர் போலீஸ் ஏட்டு தேவராஜ் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கையில் சாக்குப்பையுடன் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்தனர். பின்னர் அவர் வைத்திருந்த சாக்குப்பையை வாங்கி சோதனையிட்டனர். சோதனையின்போது அந்த சாக்குப்பையில் தலா 2 அடி நீளம் உள்ள 4 யானை தந்தங்கள் உள்ளதை போலீசார் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில், 'அவர் கவுந்தப்பாடி அருகே உள்ள குண்டுசெட்டிப்பாளையத்தை சேர்ந்த சந்திரசேகர் (வயது 45) என்பதும், அவர் பர்கூர் மலைப்பகுதியை சேர்ந்த 3 பேருடன் சேர்ந்து யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய முயன்றதும்,' தெரியவந்தது. இதைத்ெ்தாடர்ந்து சந்திரசேகரை போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட சந்திரசேகர் கொடுத்த தகவலின் பேரில் பர்கூர் மலைப்பகுதியில் கல்வாரை கிராமத்தை சேர்ந்த ராசு (40), செல்லப்பன் (35), பர்கூர் மலைப்பகுதியை சேர்ந்த மகேந்திரன் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதுமட்டுமின்றி கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொத்தம் 4 யானை தந்தங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து 4 பேரிடமும், வனத்துறையினர், 'யானை தந்தங்கள் எவ்வாறு கிடைத்தது? அல்லது யானைகளை வேட்டையாடினார்களா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Related Tags :
Next Story