பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய டிராக்டர் டிரைவர் போக்சோவில் கைது


பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய டிராக்டர் டிரைவர் போக்சோவில் கைது
x

எடப்பாடி அருகே பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய டிராக்டர் டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

சேலம்

சங்ககிரி:

மாணவி கர்ப்பம்

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவருக்கு கடந்த 6-ந் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மாணவியை பெற்றோர் மீட்டு எடப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்தபோது, 9 மாத கர்ப்பமாக இருப்பதும், வயிற்றில் குழந்தை இறந்ததால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதனைக்கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் டாக்டர்களின் அறிவுரைப்படி, மாணவியை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அறுவை சிகிச்சை மூலம் மாணவியின் வயிற்றில் இறந்த நிலையில் இருந்த பெண் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.

டிராக்டர் டிரைவர் கைது

இந்த சம்பவம் குறித்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் போலீசார் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கிய நபர் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவி, எடப்பாடி செட்டிமாங்குறிச்சி ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த பெருமாள் மகனும், டிராக்டர் டிரைவருமான தினேஷ்குமார் (வயது 21) தன்னை கர்ப்பமாக்கியதாக போலீசில் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டிராக்டர் டிரைவர் தினேஷ்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story