சிங்காரப்பேட்டை அருகே சாராயம் வைத்திருந்தவர் கைது


சிங்காரப்பேட்டை அருகே சாராயம் வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

சிங்காரப்பேட்டை போலீசார் விசுவாசம்பட்டி பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் 5 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் விசுவாசம்பட்டியை சேர்ந்த தண்டபாணி (வயது 53) என்பதும், விற்பனைக்காக சாராயத்தை கொண்டு சென்றதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் 5 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story