கந்திகுப்பம் அருகே பெண் உள்பட 2 பேர் மீது தாக்குதல்-தந்தை, மகன்கள் மீது வழக்கு
கிருஷ்ணகிரி
பர்கூர்:
கந்திகுப்பம் அருகே உள்ள பாலேப்பள்ளியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 40). அதே பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன் (65). இவர்கள் 2 பேரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகிறார்கள். சம்பவத்தன்று வீரபத்திரன் தனது நிலத்தை பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைத்து கொண்டிருந்தார். அப்போது மல்லிகா நிலத்தின் எல்லைக்கல் சேதமானதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் மல்லிகா, இவருடைய உறவினர் நேத்தகிரி ஆகியோர் தாக்கப்பட்டனர். இதுகுறித்து மல்லிகா கந்திகுப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வீரபத்திரன், இவருடைய மகன்கள் சிவமணி (40), சொக்கலிங்கம் (38) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story