பெருந்துறையில் தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் போக்குவரத்து கழக அதிகாரி கைது


பெருந்துறையில் தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் போக்குவரத்து கழக அதிகாரி கைது
x

பெருந்துறையில் நடந்த தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் போக்குவரத்து கழக அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறையில் நடந்த தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் போக்குவரத்து கழக அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

கடத்தல்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ராஜவீதியை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 53). ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கும், சிலருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 19-ந் தேதி பெருந்துறைக்கு வந்த சிலர், அய்யாசாமியை காரில் கடத்தி விழுப்புரம் கொண்டு சென்றார்கள். அப்போது அங்கு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக கடத்தல் கும்பல் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அய்யாசாமியின் மகன் பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் விழுப்புரம் சென்று அய்யாசாமியை மீட்டனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் அய்யாசாமியை கடத்தியதாக லால்குடி ரவி, திட்டக்குடி மணி, பெரம்பலூர் பரஞ்ஜோதி, ஈரோடு வைத்தியலிங்கம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகாரி கைது

இந்த கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திண்டுக்கல்லை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக உதவி பொறியாளரான பாஸ்கர் (வயது 34) என்பவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் பாஸ்கர் திண்டுக்கல் ரெயில்வே பாலம் அருகே பதுங்கி இருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அய்யாசாமியை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


Related Tags :
Next Story