போச்சம்பள்ளி, மத்தூர் பகுதியில் லாட்டரி விற்ற 2 பேர் பிடிபட்டனர்
கிருஷ்ணகிரி
மத்தூர்:
மத்தூர் போலீசார் நேற்று முன்தினம் கொடமாண்டப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்ற அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 53) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 68 லாட்டரி சீட்டுக்கள் மற்றும் ரூ.2,160 பறிமுதல் செய்யப்பட்டது. போச்சம்பள்ளி போலீசார் போச்சம்பள்ளி-காவேரிப்பட்டணம் சாலை அனுமகவுண்டர் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்ற அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (38) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story