சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி தகராறு-2 வாலிபர்கள் கைது


சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி தகராறு-2 வாலிபர்கள் கைது
x
கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாடுவனப்பள்ளி பகுதியில் 2 வாலிபர்கள் மதுபோதையில் பொதுமக்களை ஆபாசமாக பேசினர். மேலும் அவர்கள் சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பனப்பள்ளி போலீசார் அங்கு சென்று, மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் வேப்பனப்பள்ளி அர்ஜூனா காலனியை சேர்ந்த முனிரத்தினம் மகன் கணேஷ் (வயது 23), ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் அருண் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும் கணேஷ், அருண் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.


Next Story