ஓசூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 14 பேர் சிக்கினர்


ஓசூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 14 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் பல இடங்களில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாகவும், இதனால் தகராறுகள் நடந்து வருவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு புகார்கள் வந்தன. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு, அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ஓசூர் உட்கோட்டம் பாகலூர் போலீசார் பாலிகானப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணப்பா (வயது 29), மனோகர் (29), பிரகாஷ் (32), நாகேந்திரன் (36), முனிகிருஷ்ணா (29), அமர்நாத் (32) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

இதேபோல், சூளகிரி போலீசார் தொட்டூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிய செம்பரசனப்பள்ளி அருகே உள்ள கட்டிகானப்பள்ளியை சேர்ந்த முருகேசன் (38), மாரண்டப்பள்ளி தங்கபாண்டியன் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். 3 பேர் தப்பி ஓடி விட்டனர். ஓசூர் அட்கோ போலீசார் முனிதேவி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு புறம்போக்கு நிலத்தில் சூதாடிய அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (27), மாதேஷ் (34), பாலாஜி நகர் குமார் (40), முல்லைவேந்தன் நகர் சண்முகம் (33), கோவிந்தசாமி (40), தங்கவேல் (47) ஆகிய 6 பேரை கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து பணம்பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story