தர்மபுரியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடு போனது. இது தொடர்பான புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வாலிபர் தனியார் மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய மேல்விசாரணையில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் சேலத்தை சேர்ந்த பாபு (வயது 29) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர். அவர் திருடிய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story