புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்பாச்சேத்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது டி.வேலாங்குளம் கிராமம். இந்த கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்சாரிஹுசைன் தலைமையில் சென்ற போலீசார் அய்யனார் (வயது42) என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். இதில் 30 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து அய்யனாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story