ரவுடியை கொலை செய்த 4 பேர் கைது
ரவுடியை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொண்டி,
திருவாடானை சமத்துவபுரம் அருகே உள்ள அத்தாணி வயல் கண்மாய் கரையில் வசித்து வந்தவர் பிரபல ரவுடி பாண்டி என்ற முத்துப்பாண்டி (வயது 41). இவர் கடந்த 9-ம் தேதி இரவு திருவாடானையில் இருந்து செங்கமடை செல்லும் சாலையில் வயல்காட்டு பகுதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இவரது உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருவாடானை போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் சந்தேகத்தின் பெயரில் சிலரிடம் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் திருவாடானை சமத்துவத்தை சேர்ந்த நீலகண்டன் மகன் மகாலிங்கம் (வயது 24). நெப்போலியன் (27) மற்றும் 16,17 வயது 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.