ஈரோட்டில் விற்பனை செய்வதற்காக ரெயிலில் 4 கிலோ கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்காள வாலிபர் கைது


ஈரோட்டில் விற்பனை செய்வதற்காக ரெயிலில் 4 கிலோ கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்காள வாலிபர் கைது
x

ஈரோட்டில் விற்பனை செய்வதற்காக ரெயிலில் 4 கிலோ கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்காள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு


ஈரோட்டில் விற்பனை செய்வதற்காக ரெயிலில் 4 கிலோ கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்காள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா கடத்தல்

ரெயில் மூலம் ஈரோட்டிற்கு கஞ்சா கடத்தி வருவதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின் உத்தரவின்பேரில், ஈரோடு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் போலீசார் பல்வேறு மாநிலங்களில் இருந்து நேற்று ஈரோடு வந்த ரெயில்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தன்பாத்தில் இருந்து ஆலப்புழா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்தின் முதலாவது நடைமேடை பகுதிக்கு வந்தது. ரெயிலில் இருந்து பையுடன் இறங்கிய வாலிபர் ஒருவர் அவசர அவசரமாக ரெயில் நிலையத்தை விட்டு வெளியேற முயன்றார்.

வாலிபர் கைது

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் 4 கிலோ எடை உள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதை அவர் ஈரோட்டில் விற்பனை செய்வதற்காக ரெயிலில் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த அக்பர் அலி என்பவரின் மகன் இம்தியாஜ் காஜி (வயது 22) என்பது தெரியவந்தது. பின்னர் ஈரோடு ரெயில்வே போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story