சூளகிரி அருகே நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கிய விவசாயி கைது
சூளகிரி:
சூளகிரி அருகே சின்னகுதிபாலா பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பங்கஜம் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் ஒரு விவசாய நிலத்தின் கொட்டகையில் 2 நாட்டுத்துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அந்த 2 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அதனை பதுக்கி வைத்திருந்த பெரியகுதிபாலாவை சேர்ந்த விவசாயி தேவராஜ் (வயது 50) என்பவரை பிடித்து சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். சூளகிரி போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire