பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்; நகராட்சி சர்வேயர், புரோக்கர் கைது


பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்; நகராட்சி சர்வேயர், புரோக்கர் கைது
x

காரைக்குடியில் பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி சர்வேயர், புரோக்கருடன் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை


காரைக்குடியில் பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி சர்வேயர், புரோக்கருடன் கைது செய்யப்பட்டார்.

ரூ.6 ஆயிரம் லஞ்சம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யதர்ஷன் (வயது 38). இவர் தன்னுடைய வீட்டின் பட்டாவை தனது தாயார் பெயருக்கு மாற்றுவதற்காக காரைக்குடி நகராட்சியில் பணியாற்றும் நகர் சர்வேயர் சரவணன் என்பவரை சந்தித்தார். அப்போது அவர், பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இதுகுறித்து திவ்யதர்ஷன், சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூ.6 ஆயிரத்தை திவ்யதர்ஷனிடம் கொடுத்து அதை நகராட்சி அலுவலகத்தில் இருந்த சர்வேயர் சரவணனிடம் கொடுக்க கூறினர்.

சர்வேயர், புரோக்கருடன் கைது

அந்த பணத்தை சர்வேயர் சரவணனிடம் கொடுத்தபோது அங்கிருந்த புரோக்கர் மணியிடம் கொடுக்கும்படி கூறினார். இதையடுத்து அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு ஜான்பிரிட்டோ, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஜேசுதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமுகமது மற்றும் போலீசார் சர்வேயர் சரவணன் மற்றும் அவரது புரோக்கர் மணி ஆகிய 2 பேரை லஞ்சம் வாங்கியதாக கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story