பேரிகை அருகே விவசாயியை தாக்கியவர் கைது


பேரிகை அருகே விவசாயியை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

பேரிகை அருகே உள்ள ராமன்தொட்டியை சேர்ந்தவர் ரோஜப்பா (வயது 40). விவசாயி. இவருடைய நிலத்தின் அருகில் ஆனந்த் (38) என்பவரின் நிலம் உள்ளது. இதனால் இவர்களிடையே வழித்தடம் தொடர்பாக தகராறு இருந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி அவர்களிடையே வழித்தடம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த் கல்லால் ரோஜப்பாவை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து ரோஜப்பாவின் மனைவி பத்மா பேரிகை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story