பாப்பாரப்பட்டி அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் 3 பேர் கைது


பாப்பாரப்பட்டி அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விவசாயி

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிட்டனஅள்ளியை சேர்ந்தவர் மாதையன் (வயது 55). விவசாயி. இவருடைய அண்ணன் அருணாசலம், தங்கை மாரியாத்தா (50). மாரியாத்தா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால் திருமணமாகாத அவர், அதே பகுதியில் உள்ள அண்ணன் அருணாசலத்தின் வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் அருணாசலத்தின் மனைவி முனியம்மாள் (51), மகன் திம்மராயன் (34) ஆகியோர் மாரியாத்தாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாதையன், தங்கை மாரியாத்தாவை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். இது திம்மராயனுக்கு அத்திரத்தை ஏற்படுத்தியது.

அரிவாள் வெட்டு

இதனால் திம்மராயன், இவருடைய மனைவி லட்சுமி (28), தாய் முனியம்மாள், அக்காள் கணவர் செல்வகுமார் (47), அக்காள் மகன் விஜய் (23) ஆகியோருடன், நேற்று முன்தினம் இரவு மாதையன் வீட்டுக்கு சென்றார். அங்கு மாரியாத்தாவை தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறி அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

இதற்கு மாதையன் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த திம்மராயன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாதையனை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் மாதையனை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அன்று இரவே திம்மராயன், இவருடைய மனைவி லட்சுமி ஆகியோரை கைது செய்தனர். மேலும் நேற்று காலை முனியம்மாள், செல்வகுமார், விஜய் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story