யானை தந்தம் கடத்தியவர் கைது


யானை தந்தம் கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் கடந்த ஆண்டு சோகத்தூர் கூட்டு ரோடு வழியாக சிலர் யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய முயன்றனர். இது பற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் யானை தந்த கடத்தலில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் யானை தந்தங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய கந்தசாமி (வயது 48) என்பவர் தலைமறைவாக இருந்தார். மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு உத்தரவுப்படி கந்தசாமியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே டி.சுக்கம்பட்டி கிராமத்தில் பதுங்கி இருந்த கந்தசாமியை, வனச்சரகர் அருண் பிரசாத் தலைமையிலான வனத்துறையினர் கைது செய்தனர்.


Next Story