பொம்மிடி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
பொம்மிடி அருகே உள்ள பி.துரிஞ்சிபட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் தீர்த்தம்மாள் (வயது 40). கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய கணவர் மாதையன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், மகன், மகளுடன் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த மயில் மகன் மணிகண்டன் (21), தீர்த்தம்மாள் வீட்டின் ஜன்னல் கதவை திறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தீர்த்தம்மாள் கேட்டபோது, மணிகண்டன் அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தீர்த்தம்மாள் பொம்மிடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.
Next Story