மொரப்பூர் அருகே திருட்டு வழக்கில் எலக்ட்ரீசியன் கைது
தர்மபுரி
மொரப்பூர்:
மொரப்பூர் அருகே உள்ள ஆர்.கோபிநாதம்பட்டி ஊராட்சி மூக்கனூர்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி நந்தினி (வயது 29). இவர் புத்தாண்டையொட்டி கோவிலுக்கு அணிந்து செல்ல பீரோவில் வைத்திருந்த நகைகளை எடுக்க சென்றார். அப்போது 4 பவுன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து நந்தினி நேற்று முன்தினம் மொரப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், சுந்தரம்பள்ளியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சத்தியமூர்த்தி (28) நகைகளை திருடியது தெரியவந்தது. மேலும் அவர் எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்றபோது, நந்தினி வீட்டில் நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிய சத்தியமூர்த்தியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story