காதலை தொடர மறுத்த இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட வாலிபர் கைது-தர்மபுரி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை


காதலை தொடர மறுத்த இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட வாலிபர் கைது-தர்மபுரி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

காதலை தொடர மறுத்த இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட வாலிபரை தர்மபுரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கருத்து வேறுபாடு

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அஜ்ஜனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவருடைய மகன் மஞ்சுநாதன் (வயது 24). பட்டதாரியான இவர், போட்டி தேர்வுகளை எழுதுவதற்காக பயிற்சி பெற்று வந்தார்.

இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். அந்த இளம்பெண்ணும் அவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர்களிடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ஆபாச புகைப்படங்கள்

இதனால் அந்த இளம்பெண் மஞ்சுநாதனிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்க்க தொடங்கினார். இதுகுறித்து மஞ்சுநாதன், அந்த இளம்பெண்ணிடம் கேட்டுள்ளார். மேலும் தன்னை காதலிக்க வேண்டும் என்று அந்த இளம்பெண்ணிடம் அவர், வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இளம்பெண் காதலை தொடர முடியாது என்று மறுப்பு ெரிவித்துள்ளார்.

இதனால் மஞ்சுநாதனுக்கு அந்த இளம்பெண் மீது ஆத்திரம் ஏற்பட்டது. காதலை தொடர மறுத்த அந்த இளம்பெண்ணை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அதனை சமூக வலைதலங்களில் மஞ்சுநாதன் வெளியிட்டார்.

கைது

இதுபற்றி அந்த இளம்பெண்ணுக்கு தகவல் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தர்மபுரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியப்பன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மஞ்சுநாதனை நேற்று கைது செய்தனர். காதலை தொடர மறுத்த இளம்பெண்ணை பழிவாங்க, அவருடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story