ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் சிக்கினார்
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்களில் தலைமறைவாக உள்ள நபர்களை பிடிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் சக்திவேல், முருகன், கோவிந்தன் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்திய நபர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தர்மபுரியில் 3 ஆயிரத்து 100 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் தாமோதரஅள்ளி கிராமத்தை சேர்ந்த நந்தகுமார் என்கிற ஆனந்தகுமார் (வயது 28) போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர் தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story