வத்தல்மலையில் சாராயம் விற்றவர் கைது-200 லிட்டர் ஊறல் அழிப்பு


வத்தல்மலையில் சாராயம் விற்றவர் கைது-200 லிட்டர் ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-13T00:16:47+05:30)
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்களில் சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் வத்தல்மலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வத்தல்மலை கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் (வயது 38) சாராயம் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கு ஒரு பேரலில் சாராயம் காய்ச்ச வைத்திருந்த 200 லிட்டர் ஊறலையும் கைப்பற்றி அழித்தனர்.


Next Story