வழுக்கு மரம் ஏறும் போட்டியில் தகராறு: தனியார் பஸ் டிரைவரை தாக்கியவர் கைது
ஏரியூர்:
ஏரியூர் அருகே உள்ள காமராஜாபேட்டையை சேர்ந்தவர் ரமணி (வயது 36). தனியார் பஸ் டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி அந்த பகுதியில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. அப்போது ரமணிக்கும், சாமிக்கண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சாமிக்கண்ணு, ரமணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரமணி ஏரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிக்கண்ணுவை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire