காரிமங்கலம் பகுதியில் மதுபாட்டில்கள் விற்ற 7 பேர் கைது
தர்மபுரி
காரிமங்கலம்:
காரிமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதத்துக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கள் மற்றும் மதுபாட்டில்களை விற்பனை செய்த ராஜகோபால் (வயது 65), கோவிந்தசாமி (42), சாமிநாதன் (35), சரவணன் (47), சின்ன பையன் (56), கர்ணன் (50) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இதேபோல் மதுபாட்டில்களை விற்பனை செய்த மேக்கனாம்பட்டியை சேர்ந்த காளியம்மாள் (45) என்பவரை போலீசார் கைது செய்து, 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story