லாரி உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது
லாரி உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டார்.
சேலம்
சங்ககிரி:
சங்ககிரி அருகே ஊஞ்சானூர் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 52). லாரி உரிமையாளர். இவர் ஊஞ்சானூர் பாலக்காட்டில் உள்ள தங்களது குலதெய்வம் கோவிலுக்கு காரில் குடும்பத்துடன் சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தார். தொடர்ந்து அவர் ஊஞ்சனூர் இ-சேவை மையம் அருகே காரை நிறுத்தி இருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (38), ஈஸ்வரன் (38) ஆகியோர் முன்விரோதம் காரணமாக சீனிவாசனுடன் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கியதாக தெரிகிறது. மேலும் காரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சங்ககிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், ஈஸ்வரன் ஆகியோைர கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story