புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

சேலம் செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது குகை பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் சிவாஜி (வயது 47) என்பவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சிவாஜியை போலீசார் கைது செய்தனர். அவரது கடையில் இருந்து சுமார் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் அதே பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றதாக முகமது ஷெரிப் (48) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்தும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வீராணம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி ஆகிய பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்றதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story