இண்டூர் அருகே சூதாடிய 6 பேர் பிடிபட்டனர்
பாப்பாரப்பட்டி:
இண்டூர்அருகே உள்ள பி.எஸ்.அக்ரஹாரம் ஏரிக்கரையில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஹமத்துல்லா மற்றும் போலீசார் அங்கு சென்று, சூதாட்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பி.எஸ்.அக்ரஹாரத்தை சேர்ந்த கிருஷ்ணன், மாது, கோவிந்தராஜ், முனியப்பன், மாரி மற்றும் பழைய இண்டூரை சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து, ரூ.8 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire