சேலத்தில் மசாஜ் சென்டர்களில் விபசாரம்; பெண் உள்பட 4 பேர் கைது
சேலத்தில் மசாஜ் சென்டர்களில் விபசாரம் செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்தனர்.
சேலம்
சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடைபெறுவதாக அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பிற மாநிலங்களை சேர்ந்த பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மசாஜ் சென்டர் உரிமையாளரான சூரமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 29), பாலக்கோடு பகுதியை சேர்ந்த அருள் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த 2 பெண்களை போலீசார் மீட்டனர்.
இதேபோல் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு மசாஜ் சென்டரிலும் விபசாரம் நடந்தது போலீஸ் சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அதன் உரிமையாளரான அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த சதீஷ்குமார் (30) மற்றும் வரவேற்பாளராக பணியாற்றிய ஈரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து 4 பெண்களை போலீசார் மீட்டனர்.
Next Story