ஏரியூர் அருக வீட்டில் குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு-2 வாலிபர்கள் கைது


ஏரியூர் அருக வீட்டில் குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு-2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

ஏரியூர்:

ஏரியூர் அருகே வீட்டில் குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் 2 வாலிபர்களை கைது செய்தனர்.

லாரி டிரைவரின் மனைவி

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர். இவருடைய மனைவி 25 வயது இளம்பெண். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் லாரி டிரைவர் வேலைக்காக வெளியூர் சென்றார்.

நேற்று முன்தினம் இரவு அவருடைய மனைவி வீட்டில் ஒரு குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் அவர் திடுக்கிட்டு எழுந்தபோது, அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பாலியல் தொல்லை

இதுகுறித்து அந்த இளம்பெண் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மர்ம நபரை பிடிக்க அவர்கள் அங்கு பதுங்கி இருந்தனர். நள்ளிரவில் மீண்டும் மர்ம நபர் இளம்பெண்ணின் வீட்டுக்குள் புகுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் இதுகுறித்து ஏரியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து சென்று பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர், திருக்கோவிலூர் மகிமை நகரை சேர்ந்த ஜெரால்டு மகன் பிரான்சிஸ் சேவியர் (வயது 25) என்பதும், ஏரியூர் அருகே உள்ள நெருப்பூரை சேர்ந்த அவரது நண்பர் மஞ்சுநாத் (25) என்பவரின் தூண்டுதலின் பேரில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.

2 வாலிபர்கள் கைது

இதையடுத்து போலீசார் பிரான்சிஸ் சேவியரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில், மஞ்சுநாத்தை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story