மூதாட்டியிடம் நகையை பறித்தவர் சிக்கினார்
மூதாட்டியிடம் நகையை பறித்தவர் சிக்கினார்.
சேலம்
ஓமலூர்:
ஓமலூர் அருகே சந்தைதடம் பகுதியை சேர்ந்தவர் அருக்காணியம்மாள் (வயது 82). இவர் கடந்த மாதம் 14-ந் தேதி சந்தைதடத்திலிருந்து கஞ்சநாயக்கன்பட்டி செல்லும் வழியில் உள்ள சரபங்கா ஆற்றுப்பாலம் அருகே சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்து சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அருக்காணியம்மாள் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற வாலிபரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் மூதாட்டியிடம் நகையை பறித்து சென்றதாக சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (34) என்பவரை ேநற்று போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story