தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் மது விற்ற 4 பேர் பிடிபட்டனர்


தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் மது விற்ற 4 பேர் பிடிபட்டனர்
x

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் மது விற்ற 4 பேர் பிடிபட்டனர்.

சேலம்

தம்மம்பட்டி:

தம்மம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் தம்மம்பட்டி, கொண்டையம்பள்ளி, செந்தாரப்பட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது தம்மம்பட்டி பஸ் நிலையம் பின்புறம் 8-வது வார்டு பகுதியை சேர்ந்த நடராஜன் (வயது 40), கொண்டையம்பள்ளி பகுதியில் மூலப்புதூர் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் (23) ஆகியோர் அதிக விலைக்கு மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

இதேபோல் கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரத்தில் நேற்று கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது 74 கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மேகநாதன் (வயது 43), மணிமலை ராஜன் (24) ஆகியோர் தங்களது வீடுகளில் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story