தர்மபுரி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி நகரில் வீடுகள் மற்றும் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போனது. இந்த திருட்டுகளில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையில் கண்காணிப்பு பணி தீவிரபடுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சோகத்தூர் பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினா். அவர்கள் பனந்தோப்பு பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 27), பொம்மனூரை சேர்ந்த தாமஸ் (20) என்பதும், தர்மபுரி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story