கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்


கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்
x

கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்.

சேலம்

ஓமலூர்:

ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை பெலாப்பள்ளி கோம்பை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெலாப்பள்ளி கோம்பை பகுதியில் கஞ்சா வைத்திருந்த சம்பத் (வயது 54), மாரியப்பன் (60) ஆகியோர் போலீசில் சிக்கினர். அவர்களிடம் இருந்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பத் கைது செய்யப்பட்டார்.


Next Story