ஓமலூர், கொங்கணாபுரத்தில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் சிக்கினர்
ஓமலூர், கொங்கணாபுரத்தில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் சிக்கினர்.
ஓமலூரை அடுத்த தொளசம்பட்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொளசம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் சோதனை நடத்தியதில் அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர், முத்துநாயக்கன்பட்டி அருகே காரைசாவடி பகுதியை சேர்ந்த ரவி (வயது 33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை ேபாலீசார் கைது செய்தனர்.
கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட சமுத்திரம் ஊராட்சியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேக்கரி கடை அருகில் ஒருவர் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் புதுப்பாளையத்தை சேர்ந்த செல்லதுரை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, பணம், லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.